வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

என்னுடைய குடும்பம்

என்னுடைய குடும்பம் ஒரு சாதாரண குடும்பம் தான். என்னுடைய அம்மா சிறு வயதிலே ஒரு வீட்டில் வீட்டு வேலை பார்த்ததினால்(அவங்க டாக்டர் குடும்பம்)தன்னுடைய பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வர கொஞ்சம் அதிகமாகவே கஷ்ட பட்டுட்டாங்க....என்னுடைய ஊர் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு சிறு கிராமம். 

வியாழன், 7 ஜூலை, 2011

அவன் உறங்காத இரவு

மெல்ல வீசும் தென்றல் சிதறி விழும் பனித்துளி இரவுக்கு குளிரூட்டும் மார்கழி கூடி விளையாடும் விட்டில்பூச்சி வெளரிய ஒளியுமாய் மின்விளக்கு வெளிச்சவுமாய் உச்சியில் முழுநிலவு மரங்களில் முனங்களுடன் பறவைகள் அழும் வாகனங்கள் உறக்கத்தில் சபதங்கள் தொலைத்த வீதி உயர்ந்து நிற்கும் குடியிருப்பு உறக்கமின்றி வெட்டம் அணைக்காமல் மூன்றாம் அடுக்கில் ஓர்அறை பஞ்சு மெத்தை தலைகாணி இதமாய் குளிர்ரோட்டும் படுக்கறை எட்டி நிற்கிறது உறக்கம் பொட்டி தெறிக்கும் சப்தம் எதைபற்றியோ தற்க்கித்த படி வீட்டின் தலைவனும் தலைவியும் இடைவெளியின்றி ஓயாத சப்தம் வாசல் திறத்து கீழிறங்கி வீதிக்கு வந்தான் தலைவன் வெம்பி குமறும் மனம் உறக்கம் தொலைத்த விழிகள் மெல்ல நடந்தான் வீதியல் எந்தக் கவலைகளும் இன்றி வீதியோர நடை பாதையில் ஆழ்ந்து உறங்கும் மனிதர்கள் உறக்கத்தில் விலகிய போர்வை சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி தனையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை மனதை உறுத்தும் அழகியகாட்சி சற்று சம்பித்து நிற்றவன் மெய்மறந்து ஆர்வமாய் இரசித்தான் நித்த தர்க்கங்களும் சச்சரவுகளும் இரவிலும் நீளுகிறது பகல் பணமிருந்தும் எட்டாக்கனியாய் உறக்கம் விடிய இன்னும் நேரமிருக்கு ஏகாந்த பெருமூச்சு விட்டபடி மௌனமாய் மீண்டும் நடந்தான் திரும்பிப் பார்த்தான் குடியிருப்பை இன்னும் கண் மூடவில்லை அவன் வீட்டு விளக்கு

புதன், 6 ஜூலை, 2011

                                                                                  பசிக்குக் கையேந்திய
                                                                     பச்சிளம் குழந்தைக்கு
                                                                     இல்லையென்று மனமும்
                                                                     எப்படியப்பா சொல்கிறது

Welcome

என்னுடைய வலை பதிவிற்கு வருகை தரும் அனைவருக்கும் என்னுடைய நல் வாழ்த்துக்கள் ...